ஓடும் ரயிலின் பயணிகளை பெல்ட்டால் தாக்கிய இளைஞர்..! வைரலாகும் வீடியோ..!
ஓடும் ரயிலின் பயணிகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயணிகள் ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், எதிர் திசையில் சென்ற மற்றொரு ஓடும் ரயிலில் பயணிக்கும் பயணிகளை பெல்ட்டால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பீகார் வழியாக பயணிக்கும் ரயிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடீயோவை ட்விட்டரில் பதிவிட்ட நபர், இவ்வாறு செய்யும்பொழுது அந்த இளைஞரும் ரயிலில் இருந்து விழுந்து, பெரிய விபத்தும் நேரிடலாம். தயவு செய்து இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தற்போது வைரலாகும் இந்த வீடியோவுக்கு பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். கிழக்கு மத்திய ரயில்வே, தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் “எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
अवगत कराने के लिए धन्यवाद, कार्रवाई सुनिश्चित की जा रही है।
— East Central Railway (@ECRlyHJP) July 7, 2023