உலகின் மிக பெரிய பூ கண்டுபிடிப்பு.. வைரலாகும் வீடியோ!
இந்தோனேசியாவில் காடு வழியாக நடந்து செல்லும் போது தற்செயலாக உலகின் மிகப்பெரிய மலரான ரஃப்லேசியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. வைரலாகும் வீடியோ!
காடு வழியாக நடப்பது என்பது உங்கள் உடலுக்கும் மூளைக்கும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை கடைபிடிக்கும் வகையில், சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து கொண்டிருந்த ஒருவர், காட்டுப்பகுதியில் ஒரு அபூர்வ மலர் ஒன்றைக் கண்டுள்ளார்.
இந்த மலரின் பெயர் ரஃப்லேசியா அர்னால்டி, இது உலகின் மிகப்பெரிய மலர் எனவும், இதன் நடுவிலிருந்து வெளியிடும் அதிகப்படியான துர்நாற்றத்திற்கு இந்த மலர் பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மலர் 3 அடி அகலமும், 15 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும். இவை பொதுவாக 4 வருடங்கள் வளர்ச்சிக்கு பின் தான் முழுமையாக வளர்ச்சி அடையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மலரின் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
A man came across this rare flower while walking through an Indonesian forest. The rafflesia arnoldii is the largest flower in the world & only blooms for a couple of days. It is colloquially known as a corpse flower for the overpoweringly stinky odor it emits while mid-bloom. pic.twitter.com/LJmJDgfpqd
— NowThis (@nowthisnews) September 28, 2022