வேகமாக வந்து மோதிய எஸ்யூவி..தூக்கி வீசப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்..! வைரலாகும் வீடியோ.!

Delhi video

தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார்.

கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது மோதியுள்ளது. இதனால் போலீஸ் கான்ஸ்டபிள் காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்த மற்ற போலீசார் விபத்தை ஏற்படுத்திய எஸ்யூவி காரைத் பின்தொடர்ந்து துரத்திச் சென்று, காரின் ஓட்டுனரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இப்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தின் கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வேகமாக வந்த டிரக் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்