வரதட்சணை கேட்ட மணமகன்..மரத்தில் கட்டிவைத்த பெண் வீட்டார்..! வைரலாகும் வீடியோ..!

groomtiedtree

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டதற்காக மணமகன் ஒருவரை மரத்தில் கட்டி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பு பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுள்ளார். இரு வீட்டாரும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வரதட்சணை கொடுப்பதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், மணமகன் அமர்ஜித் வர்மா-வை பெண் வீட்டார் பல மணி நேரம் மரத்தில் கட்டிவைத்தனர். இதனால் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அமர்ஜீத்தின் நண்பர்களும் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.

பின்னர், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மணமகனை விடுவித்து காவலில் அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் உள்ளனர். ஆனால் இதுவரை சமரசம் ஏற்படவில்லை. என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்