உலக அளவில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ (AI) தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஏஐ கலைஞர்களுக்கு படைப்பாற்றலின் முற்றிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏஐ மூலம் கலைஞர்கள் அவர்கள் விரும்பும் எந்த கலைப்படைப்பையும் உருவாக்க முடியும். அதை அவர்கள் குறைந்த நேரத்தில் செய்ய முடியும். அதன்படி, சிவபெருமான் தாண்டவம் ஆடுவதைச் சித்தரிக்கும் ஒரு அசாதாரண வீடியோவை உருவாக்க ஒரு கலைஞர் ஏஐ-யைப் பயன்படுத்தியுள்ளார்.
ஏஐ-யைப் பயன்படுத்தி பிரபல பாரம்பரிய நடனக் கலைஞர் துருபோ சர்க்கார் சிவபெருமானின் தாண்டவத்தை உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கிய அந்த வீடியோ அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் இருப்பதோடு, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடனக் கலைஞர் நடனம் ஆடுகிறார். அப்பொழுது, ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட சிவனின் உடல், கலைஞரின் உடலோடு ஒத்துபோய், சிவனே உண்மையில் ஆடுவது போன்று உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் “அண்ணா இது வேற லெவல், வாவோ மிக்க நன்றி” என்று கலைஞரை வாழ்த்தி வருகின்றனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி…