இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு அருகே மிகப்பெரிய பனிச்சரிவு-வைரலாகி வரும் வீடியோ.. உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குப் பின்னால் இன்று(அக் 1) காலை பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் இந்த பனிச்சரிவால் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் கூறுகையில், கேதார்நாத்தின் பின்னால் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை தற்போது இரண்டாவது முறையாக உடைந்து ஆறு போல் பெருக்கெடுத்து […]
ஆப்டிகல் இல்யூஷன் பர்சனாலிட்டி டெஸ்ட்-ஆப்டிகல் மாயை இது நமது அறிவுக்கூர்மை மற்றும் கவனிப்புத்திறனை ஓரளவுக்கு கணித்துவிடும் என்று சொல்லப்படுவம் உண்டு.. சில சமயம் நமக்கு சவால் விடுக்கும் வகையில் இப்படங்கள் இருப்பதால் பலரும் இதை விரும்பி பார்த்து அதற்கு விடையை காணும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர். சமீப காலங்களில் பல மனதைக் கவரும் ஆப்டிகல் மாயைகள் வைரலாகி வருகின்றன, அந்த வகையில் தற்போது கிட்டத்தட்ட 84,000 பார்வைகளுடன் இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த ஆப்டிகல் மாயை […]
அம்மா யானையிடம் கோபப்பட்டு ரோட்டில் அழுது புரளும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ! குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றே யானைகளும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் மனிதர்களைப் போலவே சிக்கலான எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விரும்பக்கூடிய விலங்குகளில் ஒன்று. அதிலும் யானைக்குட்டி என்றால் அவ்வளவுதான், அவை தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் வரம்பற்ற இன்பத்தை அள்ளித் தரக்கூடியது. அந்தவகையில் […]
இந்தோனேசியாவில் காடு வழியாக நடந்து செல்லும் போது தற்செயலாக உலகின் மிகப்பெரிய மலரான ரஃப்லேசியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. வைரலாகும் வீடியோ! காடு வழியாக நடப்பது என்பது உங்கள் உடலுக்கும் மூளைக்கும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை கடைபிடிக்கும் வகையில், சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து கொண்டிருந்த ஒருவர், காட்டுப்பகுதியில் ஒரு அபூர்வ மலர் ஒன்றைக் கண்டுள்ளார். இந்த மலரின் பெயர் ரஃப்லேசியா அர்னால்டி, இது உலகின் மிகப்பெரிய மலர் எனவும், […]
சமவெளியில் இயங்கக்கூடிய காஸ்ஸி எனப்படும் முதல் இரு கால் ரோபோ 24.73 வினாடி 100மீ ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்டின் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, கேஸ்ஸி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமான […]
பீகாரை சேர்ந்த ஒருவர் தான் ஆர்டெர் செய்த ட்ரோன் கேமராராவுக்கு பதிலாக 1 கிலோ உருளைக்கிழங்கை பெற்றதால் அதிர்ச்சியடைந்தார். ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வது எளிதாக உள்ளதாலும் விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி மகிழ்கின்றனர். இருப்பினும் சிலர் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வதால் ஏமாற்றத்தையும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் சமீபத்தில் மீஷோ என்னும் ஷாப்பிங் வலைத்தளத்தில் மடிக்கணினி ஆர்டெர் செய்ததற்கு, பதிலாக சோப்புக்கம்பிகள் […]
ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதில் டிராக்டர் இரண்டு பகுதிகளாக உடைந்தது. விபத்துக்குள்ளான கார் மற்றும் டிராக்டரின், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், டிராக்டர் இரண்டு துண்டுகளாக உடைந்து கிடப்பதும், பென்ஸ் காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், டிராக்டரை ஓட்டி வந்த […]
மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வைரலாகும் வீடியோ.! மும்பை, அம்பர்நாத் ரோட்டரி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பள்ளி பேருந்து, கிரீன் சிட்டி வளாகத்தில் திங்கட்கிழமை(செப் 26) காலை 6.50 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அப்பகுதி மக்களும், சுற்றியிருந்தவர்களும் விரைந்து செயல்பட்டு, கவிழ்ந்த பேருந்தில் இருந்து குழந்தைகளை மீட்டதால், பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். பள்ளி பேருந்து ஓட்டுநர் வளைவில் பேருந்தை […]
பள்ளி மாணவியின் பையில் இருந்த நாகப்பாம்பை வெளியேற்றிய ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.! பாம்புகள் மிகவும் தந்திரமான இடங்களுக்குள் பதுங்கி தங்களை மிகவும் புத்திசாலித்தனமாக மறைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அதனை உறுதிபடுத்தும் வகையில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒரு பள்ளி மாணவியின் பைக்குள் சுருண்டு கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் உமா ரஜக் என்ற 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் […]
சாலையை கடக்கும் போது நகரும் கார் ஒன்றை தாண்டி குதித்து ஸ்டண்ட் செய்த மான்.. வைரலாகும் வீடியோ! நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையை கடக்க முயலும் சில மான்களில் ஒன்று அசாதாரணமாக ஓடும் கார் ஒன்றை தாண்டி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மிச்சிகன் மாநில காவல்துறையினரின் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 4K பார்வையாளர்களுடன் […]
பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வரலானது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரவீந்தர் குமார் வகுப்பறையில், ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு பஞ்சாபி மொழியில் தனது மாணவர்களுடன் பேசுவதும், பின் பாட்டு பாடி நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. மேலும் அதில் மாணவர்கள் பேராசிரியரை உற்ச்சாகப்படுத்தும் சத்தமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரஜ்னி […]
நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியது. இந்த வீடியோவை சமீபத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று ஒரு சிறுத்தை காட்டில் இருந்து குதித்து அவரை தாக்கியது. அந்த நபர் […]
கேரளாவில் வனப்பகுதிகளுக்கு இடைப்பட்ட சாலை ஒன்றில் காட்டெருமை ஒன்று ஆவேசமாக வாகனங்களை தாக்கும் வீடியோ வைரலானது.. சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடீயோக்களில் ஒன்றில், சாலைப்பகுதியின் நடுவில் வழிமரித்தப்பட்டி காட்டெருமை ஒன்று நிற்ப்பதும், அது ஆவேசமாக ஓடி வந்து ஆட்டோ ஒன்றை தலைகீழாக புரட்டுவது போலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு 7.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 282k லைக்களுடன் வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த காட்டு […]
மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.! சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள கனியாரி கிராமத்தில், மனைவி பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வர மறுத்ததால், இளைஞர் ஒருவர் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கீழே வருமாறு வற்புறுத்தியும், அவர் இறங்கவில்லை. பின்னர் மனைவியை திருப்பி […]
டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி.. வைரலாகும் வீடியோ.! அலமோவில் உள்ள டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழிக்கு உணவளிக்கும் போது மிகவும் உற்சாகமான மூன்று வயது சிறுமி ஒரு தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில் ‘நாங்கள் அனைவரும் தீக்கோழிகளுக்கு பயப்படுகிறோம், ஆனால் அவள் தீக்கோழியை கட்டிப்பிடித்து மகிழ்ந்தாள், […]
அமெரிக்காவில் கொண்டாடப்படும் விசித்திரமான ஹாலோவீன் திருவிழாவில் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” ஸ்டாச்சு வைரலாகும் வீடியோ!! அமெரிக்காவில் மிகவும் வேடிக்கையான மற்றும் விசித்திரமான பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தங்கள் ஆடைகள் மற்றும் பயமுறுத்தும் அலங்காரங்களை உருவாக்க பலரும் பல விதமான யோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, நெட்ஃபிக்ஸ் தொடரான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4″ஐ இன்ஸ்பைர் செய்யும் வகையில் அதில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான மேக்ஸ், வில்லன் வெக்னாவின் மயக்கத்திற்கு உட்பட்டு […]
மேட்ரிமோனியல் விளம்பரம் ஒன்றில் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் “கால் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்பிஏ அழகான பெண் மணமகனைத் தேடுகிறார். மணமகன் “ஐஏஎஸ்/ஐபிஎஸ், பணிபுரியும் மருத்துவராக அல்லது தொழிலதிபராக,இருக்க வேண்டும். இந்த அனைத்து அம்சங்களும் ஒரு மேட்ரிமோனியல் விளம்பரத்தில் மிகவும் பொதுவானவை. இதில் வேடிக்கையூட்டும் வகையில் குறிப்பில் “சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் தயவுசெய்து “கால் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரிப்படுத்தியுள்ளது. இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தின படத்தைப் பகிர்ந்த பயனர் சமீர் […]
ராஜஸ்தானில் வயதான தந்தையிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒருவர் வயதான தந்தை தெருவில் வைத்து அடித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தனது தந்தையுடன் வீட்டு விஷயங்களில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த வீடியோவில்,வயதான ஒரு நபரை ஒரு இளைஞர் தெருக்களில் வைத்து தாக்குவது […]
டெல்லியில் ஃபார்ச்சூனர் கார் ஒன்று சாலையில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது கட்டுப்பாடின்றி மோதி, 19 வயது இளைஞன் ஒருவனை 100 மீட்டர் வரை இழுத்துச் சென்றது. திங்கள்கிழமை(செப் 10) மாலை டெல்லியின் கரோல் பாக் பகுதியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் கட்டுப்பாடின்றி மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 19 வயது இளைஞரை 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு அங்குள்ள சிசிடிவி கேமரா […]
விஞ்ஞானிகள் உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட காட்டு ஆர்க்டிக் ஓநாயை உருவாக்குகியுள்ளனர். பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் “இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது” என்று தெரிவித்தனர். மாயா என்ற பெயரிடப்பட்ட அந்த குளோன் ஓநாய் பிறந்து 100 நாட்கள் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் […]