MSDhoni: அந்த சாக்லேட்டை குடுங்க..! ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய எம்.எஸ்.தோனி.!

MSDhoni

தனது விடுமுறையை கழிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இந்த ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியை தோனி நேரில் சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடினார். அதன்படி, டிரம்ப் மற்றும் தோனி இருவரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

அந்த வகையில், தற்பொழுது தோனி தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்து உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனியை பார்த்த ரசிகர் ஒருவர் தனது கையில் இருக்கும் மினியேச்சர் பேட்களில் ஆட்டோகிராப் கேட்கிறார். உடனே தோனி அந்த பேட்டில் ஆட்டோகிராப் போட்டு அவரிடம் கொடுக்கிறார்.

தோனி கையெழுத்திட்டு பேட்களைத் திரும்பக் கொடுத்தவுடன், அவர் ரசிகரின் கையில் இருக்கும் சாக்லேட்டை திருப்பி தருமாறு ரசிகரிடம் கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ மூலம் தோனிக்கு கிரிக்கெட் மைதானத்தைப் போலவே, மைதானத்திற்கு வெளியிலும் அனைவரது மனதையும் கவர்ந்தவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Neel Patel (@neel2425)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்