மத்தியப் பிரதேசத்தில் புலியை எதிர்த்துப் போராடி தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய தாய்.
தாய்மார்கள் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புலியிடமிருந்து இருந்து தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை, மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை வயலுக்கு அழைத்துச் சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
வயலுக்குள் நுழைந்த புலி தனது மகனை தாக்கியதாகவும், குழந்தையை காப்பாற்ற முயன்ற போது தன்னையும் புலி தாக்கியதாக சௌத்ரி கூறினார்.
இதனைத்தொடர்ந்து கிராம மக்களின் உதவியுடன் தனது 15 மாத குழந்தையை புலியிடமிருந்து காப்பாற்றியதாகவும் அவர் கூறினார். மேலும் குழந்தை மற்றும் தாய் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…