மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்த யானைகள் வைரலாகும் வீடியோ
ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த யானைகள் வைரலாகும் வீடியோ
வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் யானைகள் நுழைந்தன. இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் யானைகள் சுதந்திரமாக கட்டிடத்திற்குள் சுற்றி வருவதையும், அதனை அங்கிருந்தவர்கள் தூரத்தில் இருந்தே செல்போனில் படம் பிடிக்க முயன்றதையும் காணலாம்.
இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது காடுகளை அழிப்பதன் விளைவாக மட்டுமே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram