பாம்பு எதிரில் வந்தா பயப்படவேண்டாம்! தப்பிக்க இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க!
Snake பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது பாம்பு என்று பெயரை சொன்னால் கூட நமக்கு ஒரு விதமான பயம் வரும். அதற்கு காரணமே அது நம்மளை கடித்து விட்டது என்றால் நமது உடலில் விஷம் ஏறிவிடும் என்பதால் தான். இதன் காரணமாகவே பாம்பை நாம் நேரில் பார்த்தால் கூட பதட்டத்தில் ஓடி சென்றுவிடுவோம். ஆனால், பாம்பை பார்த்து பயப்படவே கூடாது பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் அது உங்களுடைய எதிரில் இருந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும் செய்ய கூடாது என்பதனை விவரமாக நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.
READ MORE- Riddle : யார் முட்டாள்..? தெளிவா யோசிச்சு பதில் சொல்லுங்க பாக்கலாம் ! 15 செகண்ட் தான் டைம் !
பாம்பு எதிரில் வந்தால் என்ன செய்வது?
பயப்படவே கூடாது
- நீங்கள் சென்று கொண்டு இருக்கும் வழியில் பாம்பு வந்தது என்றால் நீங்கள் முதலில் அதனை பார்த்து பயப்படவே கூடாது. ஏனென்றால், உங்களை பார்த்தவுடன் பாம்பு உங்களை கடித்த ஆகவேண்டும் என்று நினைக்காது. நீங்களே பாம்பு இருக்கும் பக்கத்தில் பதட்டத்தில் சென்றாலோ அல்லது அதனை தாக்க முயன்றால் மட்டுமே அது உங்களை கடிக்க வரும். எனவே பாம்பை பார்த்தவுடன் பயந்து அதனை தொந்தரவு செய்வதோ அதனை நோக்கி ஓடுவோதோ கூடாது.
Read More :- எதுல தண்ணீர் அதிகமா இருக்கு? மோட்டுவுக்கு ஜம்மனு கண்டுபுடிச்சு கொடுங்க!
பாம்பை போகவிடவேண்டும்
- பாம்பு உங்கள் எதிரில் இருக்கிறது நீங்கள் அதற்கு அருகில் வழியை மறைத்து நின்றுகொண்டு இருக்கிறீர்கள் என்றால் முதலில் பாம்பை அதனுடைய வழியில் போகவிடுங்கள். அப்படி இல்லை என்றால் பக்கத்தில் நீளமான குச்சி எதுவும் இருந்தால் அந்த குச்சியை எடுத்துக்கொண்டு நீங்கள் நிற்கும் இடத்தில் வேகமாக தட்டுங்கள். ஏனென்றால், பாம்புகளுக்கு காதுகள் இல்லை அதிர்வுகளை உணர்ந்துகொண்டு அதிர்வு இல்லாத இடத்திற்கு செல்லும்.
READ MORE- குழந்தை அழுகுது! டக்குனு இந்த 3 பேரில் யார் அம்மானு கண்டுபிடிச்சு கொடுங்க!
அமைதி ரொம்ப முக்கியம்
- பாம்பு உங்களுடைய வீட்டிற்குள் வந்துவிட்டது என்றால் வேகமாக பயந்து போய் எதுவும் செய்யக்கூடாது. அதனைப்போலவே, பாம்பை பார்த்ததும் பாம்புகளுக்கு பிடிக்காத எந்த விஷயங்களையும் செய்ய கூடாது. அமைதியாக இருந்து பாம்பு எந்த வழியில் செல்கிறதோ அதற்கு மற்றோரு புறம் சென்று தப்பித்து விட்டு உதவுக்கு யாரையாவது அழைக்கலாம்.