கின்னஸ் சாதனை படைத்த ரோபோ.. 24.73 வினாடிகளில் 100 மீட்டர்.. வைரலாகும் வீடியோ!
சமவெளியில் இயங்கக்கூடிய காஸ்ஸி எனப்படும் முதல் இரு கால் ரோபோ 24.73 வினாடி 100மீ ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்டின் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, கேஸ்ஸி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமான அஜிலிட்டி ரோபாட்டிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஸ்ஸி ரோபோட் கின்னஸ் சாதனைக்காக சமவெளியில் ஓடும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Robot World Record: Not sure whether to be inspired or terrified? https://t.co/xevauknkpV pic.twitter.com/2SlycGFsaX
— Dan Tilkin (@DanTilkinKOIN6) September 27, 2022