மின்சார ஸ்கூட்டர்க்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்-வைரலாகும் புகைப்படங்கள்!
கேரளாவில் மின்சார ஸ்கூட்டர்க்கு மாசுக்கட்டுப்பாட்டு(PUC) சான்றிதழ் இல்லாததால் அபராதம்-வைரலாகும் புகைப்படங்கள்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலஞ்சேரியில் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) இல்லாததால் மின்சார ஸ்கூட்டர் உரிமையாளருக்கு கேரள போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்ததுள்ளது.
அந்த வாகனம் மற்றும் போலீசார் வெளியிட்ட இ-சலான் இரண்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளப் பயனாளிகள், மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், இந்தப் பிரச்னையைக் கவனிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.