வகுப்பறையில் குடிபோதையில் பாடி ஆடும் பேராசிரியர்.! வைரலாகும் வீடியோ..
பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வரலானது.
குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரவீந்தர் குமார் வகுப்பறையில், ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு பஞ்சாபி மொழியில் தனது மாணவர்களுடன் பேசுவதும், பின் பாட்டு பாடி நடனமாடுவதும் பதிவாகியுள்ளது.
மேலும் அதில் மாணவர்கள் பேராசிரியரை உற்ச்சாகப்படுத்தும் சத்தமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரஜ்னி சிங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
नशे में धुत होकर क्लासरूम पहुंचे प्रोफेसर! वायरल वीडियो पठानकोट के जीएनडीयू कॉलेज का है.#pathankot #punjab pic.twitter.com/0UbtNQHvnU
— rajni singh (@imrajni_singh) September 21, 2022