வரதட்சணை தகராறு…கோடரியால் தாக்கப்பட்ட பெண்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!

womanbrutallyattacked

உத்தரபிரதேசத்தில் வரதட்சணைத் தகராறு காரணமாக பெண் ஒருவரை அவரது மாமியார் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் அவரது மாமியாரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை தகராறு காரணமாக அந்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தி வைரலாகி வருகிறது.

அதில், அந்த பெண்ணை அவரது மாமியார் வலுக்கட்டாயமாக தனது வீட்டை விட்டு வெளியே இழுத்து தள்ளுகிறார். பின் ஒருவர் அந்த பெண்ணை கோடாரியால் தாக்குவதையும், வேதனையில் அந்த பெண் கூச்சலிடுவதையும் காணலாம். அந்த பெண் தனது தாய் வீட்டில் இருந்து திரும்பி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதையடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி பெண்ணின் மாமனாரை கைது செய்தனர். காவல் உதவி ஆணையர் கூறுகையில், பெண்ணின் மாமனார் காவலில் வைக்கப்பட்டுள்ளார், தாக்குதலில் ஈடுபட்ட மற்ற அனைத்து நபர்களையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்