பள்ளி மாணவி பைக்குள் நாகப்பாம்பு.. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.!

Default Image

பள்ளி மாணவியின் பையில் இருந்த நாகப்பாம்பை வெளியேற்றிய ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.!

பாம்புகள் மிகவும் தந்திரமான இடங்களுக்குள் பதுங்கி தங்களை மிகவும் புத்திசாலித்தனமாக மறைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அதனை உறுதிபடுத்தும் வகையில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒரு பள்ளி மாணவியின் பைக்குள் சுருண்டு கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் உமா ரஜக் என்ற 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்ததுள்ளார்.

ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு ஒன்று வெளியேறியதை கண்டு ஆசிரியர் திகைத்து போனார்.

அதிர்ஷ்டவசமாக, நாகப்பாம்பால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்