இமயமலை கேதார்நாத் கோவில் பகுதியில் பனிச்சரிவு.. வைரலாகும் வீடியோ!
இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு அருகே மிகப்பெரிய பனிச்சரிவு-வைரலாகி வரும் வீடியோ..
உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குப் பின்னால் இன்று(அக் 1) காலை பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் இந்த பனிச்சரிவால் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் கூறுகையில், கேதார்நாத்தின் பின்னால் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை தற்போது இரண்டாவது முறையாக உடைந்து ஆறு போல் பெருக்கெடுத்து ஒட்டியது என கூறினார்.
முன்னதாக, கேதார்நாத் கோவில் அருகே உள்ள சோராபரி பனிப்பாறை பகுதியில் செப்டம்பர் 22 மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | Uttarakhand: An avalanche occurred this morning in the Himalayan region but no damage was sustained to the Kedarnath temple: Shri Badrinath-Kedarnath Temple Committee President, Ajendra Ajay pic.twitter.com/fyi2WofTqZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 1, 2022