பிரதமர் மோடியுடன் செல்ஃபி..வரிசையில் நின்ற அமெரிக்க அரசியல்வாதிகள்..! வைரலாகும் வீடியோ..
பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க அமெரிக்க அரசியல்வாதிகள் வரிசையில் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு மூன்றுநாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 1 மணி நேரம் உரையாற்றினார். அவரது உரையை கேட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் பலரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.
பிறகு, பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலரும் வரிசையில் நின்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுக்க அமெரிக்க காங்கிரஸார் வரிசையில் நிற்பதைக் காட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
#WATCH | US Congressmen lined up to take autographs and selfies with PM #NarendraModi after his address to the joint sitting of the US Congress, earlier today
Follow updates https://t.co/q7y6vaAbHJ
???? ANI pic.twitter.com/hn10LOoiIL
— Hindustan Times (@htTweets) June 23, 2023