மரம் வெட்டப்பட்டதால் நூற்றுக்கணக்கான பறவைகள் பலி வைரலாகும் வீடியோ
கேரளாவில் மரம் வெட்டப்பட்டதால் பல பறவைகள் உயிரிழந்தன. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக மரம் வெட்டப்பட்டதில் புதிதாக குஞ்சு பொரித்த நூற்றுக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டன மற்றும் ஏராளமான முட்டைகள் அழிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது, அதில் மரம் வெட்டப்படுவதும், சாலையில் பறவைகள் இறந்து கிடப்பதும் பதிவாகியுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக கேரள வனத்துறை சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 4 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#WatchVideo: Birds die due to felling of tree in Kerala#Tirungadi #Kerala #Viral #ViralVideo #Trees #HeartBreaking #India #Birds #SaveBirds pic.twitter.com/2mmRgVzf7q
— Free Press Journal (@fpjindia) September 2, 2022