சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாக்கிய சிறுத்தைப்புலி.. வைரலாகும் வீடியோ..!
நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியது. இந்த வீடியோவை சமீபத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று ஒரு சிறுத்தை காட்டில் இருந்து குதித்து அவரை தாக்கியது. அந்த நபர் கீழே விழுந்து விரைவாக திருப்பி செல்வது போன்றவை அதில் பதிவாகியுள்ளது.
வன அதிகாரி தனது ட்வீட்டில் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ 255k பார்வைகளையும் 8,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.
On Dehradun-Rishikesh Highway….
Both are lucky ☺️☺️ pic.twitter.com/NNyE4ssP19— Susanta Nanda IFS (@susantananda3) September 21, 2022