கேரளாவில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக கேரளா மாநிலம் கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் ஜான்வி என்ற ஒன்பது வயது சிறுமி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது மூன்று தெருநாய் சிறுமியை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் நாய்கள் சிறுமியை தரையில் தள்ளி கடிப்பது தெரிகிறது. உதவிக்காக சிறுமி அலறியதும், அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தபோது நாய்கள் சிறுமியை விட்டு ஓடிவிட்டன.
நாய்கள் கடித்ததால் தலை, வயிறு, தொடைகள் மற்றும் கைகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், ஜான்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சத்தினம்குளத்தில் 10ம் வகுப்பு படிக்கும் ஆதில் என்ற மாணவனை தெருநாய் கடித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…