கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் 9 வயது சிறுமி காயம்..! வெளியாகிய வீடியோ..

Stray Dogs Attack

கேரளாவில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக கேரளா மாநிலம் கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் ஜான்வி என்ற ஒன்பது வயது சிறுமி  தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது ​​மூன்று தெருநாய் சிறுமியை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் நாய்கள் சிறுமியை தரையில் தள்ளி கடிப்பது தெரிகிறது. உதவிக்காக சிறுமி அலறியதும், அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தபோது நாய்கள் சிறுமியை விட்டு ஓடிவிட்டன.

நாய்கள் கடித்ததால்​ தலை, வயிறு, தொடைகள் மற்றும் கைகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், ஜான்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சத்தினம்குளத்தில் 10ம் வகுப்பு படிக்கும் ஆதில் என்ற மாணவனை தெருநாய் கடித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்