அடி தூள்.! தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்த விக்ரம்.!

கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது என்றே கூறலாம்.

படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. வெளியான சில நாட்களிலே படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்த நிலையில் படம் தமிழகத்தில் மட்டும் எதனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 103 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் இறுதியில், விக்ரம் படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த என்ற சாதனையை படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment