8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது விகாஸின் திட்டம்.! ம.பி போலீஸார் தகவல்.!

கான்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட 8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது விகாஸ் துபேயின் என மத்திய பிரதேசக் காவல்துறை தகவல்.

கடந்த ஜுன் 3-ம் தேதி கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற பின் ரவுடி விகாஸ் துபே தலைமறைவானார். இதைத்தொடர்ந்து 6 நாட்களுக்கு பின் அவர் நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலபைரவர் கோயிலில் போலீசார் கைது செய்தனர். இவரை கைதுசெய்த விகாஸ் துபேவை மத்திய பிரதேச போலீஸார் உஜ்ஜைனின் ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியது. அப்போது, பல திடுக் தகவல்களை வெளியானது.

அதில், கான்பூரின் பிரபல ரவுடியான விகாஸ் துபேவிற்கு அப்பகுதியில் உள்ள சவுபேபூர் காவல் நிலையப் போலீஸாரிடன் நல்ல நட்பு இருந்துள்ளனர். ஆனால், அப்பகுதி டி.எஸ்.பி தேவ்ந்ந்திர மிஸ்ரா தொடர்ந்து விகாஸ் துபேவிற்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், விகாஸ் துபே டி.எஸ்.பியை கொல்ல முடிவு செய்தார். இதற்கான வாய்ப்பாக கடந்த ஜூன் 2 நள்ளிரவு டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஒரு போலீஸ் படை தன்னை கைது செய்ய வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை பயன்படுத்தி டி.எஸ்.பியை சுட்டுக்கொன்று எரித்து சாம்பலாக்கி ஆதாரங்கள் இன்றி செய்ய திட்டமிட்டேன். இதற்காக,  சுமார் 100 லிட்டர் ஆயிலை தனது பிக்ரு கிராம வீட்டில் வாங்கி வைத்தேன். திட்டமிட்டபடி பிக்ரு கிராம  வீட்டிற்கு தனது நண்பர்களை துப்பாக்கிகளுடன் வரும்படி  அழைத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலீஸார் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார் விகாஸ்.

இந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களை தொடர்ந்து உ.பி அதிரடிப் படையினரும், பிக்ரு கிராமத்திற்கு வந்ததால் தனது திட்டம் நிறைவேறவில்லை என மத்திய பிரதேச போலீஸாரிடம் கூறினார்.

மேலும், நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அந்த துப்பாக்கி சூடு நடத்தியதால் தான் எனக்கு இந்த நிலைமை எனக் கூறி  விகாஸ் அழுதுள்ளார். உத்தர பிரதேசத்தில் விகாஸ் துபே இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan