எனது மகனை சுட்டுக்கொன்றது நல்லது தான்.! – விகாஸ் துபேயின் தந்தை வேதனை.!

போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபேயின் தந்தை கூறுகையில், இந்த மாதிரியான நபர் சுட்டுக்கொல்லப்பட்டது நல்லதுதான். இவனால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். என வேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 60 வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடியான விகாஸ் துபே. உத்திர பிரதேச போலீசார் இவரை பிடிக்க சென்றபோது, 8 காவலர்களை சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், விகாஸ் துபேவை கைது செய்தனர். பின்னர் அவரை கான்பூர் கொண்டு செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்பியோட முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொண்டனர்.

இவரது இறுதி சடங்கில் மனைவி, மகன், மைத்துனர் மட்டுமே கலந்துகொண்டனர். தாய், தந்தை, உடன் பிறந்தோர் கலந்துகொள்ள வில்லை. விகாஸ் துபே குறித்து, அவரது தந்தை கூறுகையில், இந்த மாதிரியான நபர் சுட்டுக்கொல்லப்பட்டது நல்லதுதான். இவனால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். என வேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.