உலகளவில் தளபதி விஜய்யின் ‘பிகில்’ டிரைலர் படைத்த சாதனை.!

உலகளவில் தளபதி விஜய்யின் ‘பிகில்’ டிரைலர் படைத்த சாதனை.!

உலகளவில் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் டிரைலர் 2.3மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்தாண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘பிகில்’. இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.இதில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா ஐயர், ரேபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது . ஆம் இந்த படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்து ரசிகர்கள் தளபதி தீபாவளியாக கொண்டாடினார்கள். இந்த படம், மொத்தமாக ரூ 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகவும், மேலும் திரைக்கு வந்து உலகம் முழுவதும் ரூ 300 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் 2.3மில்லியன் லைக்குகளை பெற்று உலகளவில் சாதனை படைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை பிகில் படத்தொகுப்பாளரான ரூபன் உலகளவில் பிகில் பட டிரைலர் அதிக லைக்குகளை பெற்றது குறித்து பதிவிட்டுள்ளார். மேலும் அதற்காக தளபதி விஜய் ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube