அதிமுக வெற்றிபெற்றால் இன்னோவா கார், தங்க சங்கிலி பரிசு.! விஜயபாஸ்கர் அறிவிப்பு.!

Election2024 : அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது.

அதிமுக சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் P.கருப்பையா என்பவர் போட்டியிடுகிறார், இவரை ஆதரித்து திருச்சி தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, திருச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை வெற்றிபெற வைக்க வேண்டும். அப்போது அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும், வட்ட செயலாளர்களுக்கு 5 பவுன் தங்க சங்கிலிபரிசாக வழங்கப்படும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.