கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் நேற்று (அக்டோபர் 19) திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர்அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிவருகிறார்கள். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் முதல் நாள் வசூல் மிரள வைத்துள்ளது.

அதன்படி, லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான முதல் நாளில் மட்டும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல, தமிழகத்திலும் படம் 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற  சாதனையையும் படைத்ததுள்ளது.

அதைப்போல உலகம் முழுவதும் முதல் நாளிலே 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த 3-வது படம் என்ற சாதனையையும் இந்த திரைப்படம் படைத்துள்ளதாம். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி மற்றும் 2.0 ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் முதல் நாளிலே 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இதனையடுத்து, விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தற்போது அந்த சாதனையை படைத்துள்ளது. லியோ படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே படம் வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து எந்தெந்த படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.