வெற்றி விழா முடிந்த கையோடு ‘தளபதி 68’ படப்பிடிப்பு சென்ற விஜய்! எந்த இடத்திற்கு தெரியுமா?

வெற்றி விழா முடிந்த கையோடு ‘தளபதி 68’ படப்பிடிப்பு சென்ற விஜய்! எந்த இடத்திற்கு தெரியுமா?

thalapathy 68 shoot

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கஸ்டடி திரைப்படத்தை தொடர்நது இயக்குனர் வெங்கட் பிரபு விஜையின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, ஸ்னேகா, மீனாட்சி, மோகன், பிரேம் ஜி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. பூஜைக்கான வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தளபதி 68 படத்தின் வில்லன் யார் தெரியுமா? பிஸியான நடிகரை லாக் செய்த வெங்கட் பிரபு!

இந்த நிலையில், படத்தின் பாடல் காட்சிகளை எல்லாம் படக்குழு படமாக்கி வரும் நிலையில், 2 பாடல்களை படமாக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் கசிந்தது. லியோ படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற காரணத்தால் தளபதி 68 படப்பிடிப்பிற்காக விஜய் தாய்லாந்து செல்லவில்லை படக்குழு மட்டும் அங்கு சென்றது.

பிறகு சென்னையில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் கலந்துகொண்ட விஜய் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி மட்டும் அட்வைஸ் கூறினார். அதன் பிறகு 1 நாள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு இன்று காலை தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பி சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்கிறார்.

சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்

விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாங்காக்கில் தளபதி 68 படத்திற்கான சண்டைக்காட்சிகள் மும்மரமாக எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 5 நாட்கள் தொடர்ந்து இந்த சண்டை காட்சியை தான் படக்குழு படமாக்க திட்டமிட்டுள்ளதாம். விரைவில் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube