பிறந்தநாள் முன்னரே சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்.. தொடங்கியது உதவித்தொகை பணி!

சென்னை: 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் விரைவில் உதவித்தொகை வழங்கவுள்ளார்.

கல்வி விருது விழா என்ற பெயரில் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார்.

அந்த வகையில், இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில், மாணவ மாணவிகளை விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், 10 நாட்களுக்குள் மாணவ மாணவிகளை தேர்வு செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டு நடந்துவிடக் கூடாது என்பதால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கவுள்ளார்.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதன் பிறகு இந்த விழா நடத்தப்படும் என்றும், ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு முன்பே இந்த விழா நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தனது பிறந்த நாளுக்கு முன்பாக மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கும் விஜய், தேர்தல் முடிந்த உடன் தமிழக வெற்றிக் கழக பணிகளை தீவிரப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.