மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Vignesh Shivan Nayanthara

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளை தத்தெடுத்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து நயன்தாரா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நயன்தாரா கடந்த நவம்பர் 18-ஆம் தேதி 39-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் வாங்கி தன்னுடைய குழந்தைகளை அழைத்து வந்து குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். அது மட்டுமின்றி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த கிப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

லியோ படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அந்த பரிசு என்னவென்றால், விலை உயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸின் சொகுசு கார் பிராண்டாடுடைய மேபேக் காரை (maybach) தான் பரிசாக வழங்கி உள்ளாராம். இந்த காரின் விலை கிட்டத்தட்ட 2 கோடி முதல் 3 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தன்னுடைய கணவர் இந்த காரை கிப்ட் ஆக கொடுத்துள்ளதாக நயன்தாராவே தெரிவித்துள்ளார்.
காரின் உடைய லோகோவை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள அவர் என்னுடைய அன்பு கணவர் எனக்கு இதனை பரிசாக கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இதைப்போல கடந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் ஒரு கணம் ஒரு போதும் பாடலை புல்லாங்குழலில் ஒருவரை வாசிக்க வைத்து சர்பரைஸ் கொடுத்து இருந்தார்.
மேலும் நடிகை நயன்தாரா தற்போது அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Join our channel google news Youtube