டெங்கு கட்டுப்பாட்டில் மெத்தனம்! 50 ஊழியர்களை நீக்கிய அதிரடி ஆட்சியர்! மேலும் தொடரும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் வேலூரில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் 1936 தற்கால ஊழியர்களை பணியமர்த்தி டெங்கு காய்ச்சல் தடுப்பதற்காக வீடு வீடாக தடுப்பு நடவடிக்கைகளை மேக்கொள்ள பணியமர்த்தப்பட்டனர்.
தற்போது டெங்கு காய்ச்சலால் வேலூர் மாவட்டத்தில் 146 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை பனி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் மெத்தன போக்கு தொடர்ந்தால், இந்த பணிநீக்க நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.