புன்னகையால் இணைய உலகை கலக்கிய வேலம்மாள் பாட்டி காலமானார்..! முதல்வர் இரங்கல்..!

புன்னகையால் இணைய உலகை கலக்கிய வேலம்மாள் பாட்டி காலமானார்..! முதல்வர் இரங்கல்..!

Tamilnadu CM MK Stalin

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்  என முதல்வர் இரங்கல்.

கொரோனா பேரிடர் நிவாரணத்தொகை பெற்றபோது, தனது புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்த வேலம்மாள் பாட்டி காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் இரங்கல்  தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் பதிவில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’  என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube