எந்த காலத்திலும் பாஜக – பாமக உடன் கூட்டணி இல்லை.! திருமாவளவன் மீண்டும் திட்டவட்டம்.!

எந்த காலத்திலும் பாஜக – பாமக உடன் கூட்டணி இல்லை.! திருமாவளவன் மீண்டும் திட்டவட்டம்.!

Thirumavalavan

எந்த காலத்திலும் பாஜக – பாமக உடன் கூட்டணி இல்லை  என விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பேசியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தலைமையில் தமிழகத்தில் அங்கங்கே நடந்த சாதிய பாகுபாடு செயல்களுக்கு எதிராக மதுரையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், RSS மற்றும் பாமக ஆகிய கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எந்த காலத்திலும் பாஜகவுடனும், பாமகவுடனும் கூட்டணி சேரப்போவதில்லை எனவும்,  மதவெறி மற்றும் சாதி வெறியை தூண்டி அரசியல் லாபம் சேகரிக்கும் சனாதன சக்திகள்தான் பாஜகவும் பாமகவும் என கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதே போல கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், பாஜக – பாமகவோடு கூட்டணியில் இருக்க மாட்டோம். அந்த காட்சிகள் இருக்கும் கூட்டணிக்குள் விசிக இருக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube