சென்னையில் விசிக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!

சென்னையில் விசிக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!

chennai murder

சென்னை கே.கே. நகரில் விசிக நிர்வாகி தேநீர் கடைக்கு சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை.

சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் (எ) குட்டி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு விசிக நிர்வாகி சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 2 நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக விசாரணையில் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி அதிஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெற்றி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube