சித்ரா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வனிதா விஜயகுமார்.!

சித்ரா மரணத்தில் ஏதோ தவறாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .

மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் . இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்ராவின் மரணம் குறித்து கூறியதாவது,

இந்தாண்டு நான் கேட்ட மிக அதிர்ச்சியூட்டும் செய்தி இதுதான். சித்ரா, என்ன நடந்தது? கடந்த வாரம்தான் அவர் விருந்தினராகப் பங்கேற்ற ‘கலக்கப் போவது யாரு’ படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமான, தைரியமான, அழகான மற்றும் மகிழ்ச்சியான பெண். அவர் ரேஷ்மாவை நினைவுப்படுத்தியதாக அவரிடம் சொன்னேன்.

தற்கொலை எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. என்னவோ சந்தேகமாக இருக்கிறது. நேற்றிரவு ஸ்டார் மியூஸிக் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார்.அதே நேரத்தில் அதன் அருகில் நடந்து கொண்டிருந்த ‘கலக்கப் போவது யாரு’ அரங்கில் நானும் படப்பிடிப்பில் இருந்தேன். அங்கிருந்து இருவரும் இரவு 2.30 மணியளவில் ஒரே நேரத்தில் கிளம்பினோம். அவர் தானே ஓட்டி கொண்டு ஓட்டல் அறைக்குச் சென்று தானே தற்கொலை செய்து கொண்டாரா?

இதில் ஏதோ தவறாக இருக்கிறது, எனக்கு இது சரியாக தோன்றவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அவள் என் பார்வையில் உயிருடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.