ஒடிசாவில் வந்தே பாரத்..! நாளை ரூ.8,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

ஒடிசாவில் வந்தே பாரத் ரயில் சேவையை முதல் முறையாக காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

ஒடிசா மாநிலத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார. நாளை மதியம் 12:30 மணிக்கு, ஒடிசாவில் உள்ள பூரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

அதுமட்டுமில்லாமல், ஒடிசா மாநிலம் புரி – மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.  இதுவரை பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை நேரில் சென்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாளை முதல் முறையாக ஒடிசாவில் காணொலி காட்சி மூலம் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்