வலிமை படத்தின் பாடல் ஆல்பம் இன்று வெளியீடு!- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

வலிமை படத்தின் பாடல் ஆல்பம் இன்று வெளியீடு!- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகி பாராட்டுகளை பெற்று வந்த நிலையில், பாடல் ஆல்பம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் மீது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் திரையில் பார்ப்பதற்கு எதிர்பார்த்து காத்துகொண்டியிருக்கிறார்கள். இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்குமார் ரசிகர்களுக்கு தங்கள் 2 வருட காத்திருப்பிற்கு பலனாக வரும் ஜனவரி 13-ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே, இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எதிர்பார்ப்பை அதிகரிக்கும விதமாக வலிமை படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 2 மணிநேரம் 59 நிமிடம் ஓடும் வலிமை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது.

இந்த நிலையில், வலிமை திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் இருக்கும் நிலையில், படத்தின் பாடல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் யுவன் இசையில் விக்னேஷ் சிவன் எழுதி, சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் முழு ஆல்பமும் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், சமூகவலைத்தளமான ட்விட்டரில் #ValimaiAlbum என்ற ஹாஷ்டேக்கை ட்ரண்ட் செய்து படத்தின் முழு பாடல்களையும் கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சோனி மியூசிக் சவுத் வலிமை படத்தின் முழு ஆல்பம் இன்று வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube