வலிமை: போனி கபூர்,ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ்.!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படம் வெளியாகி 3 வது வரமாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படம் தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக 1கோடி நஷ்ட ஈடு கேட்டு மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நிதி மன்றத்தில் வழக்கு செய்திருந்தார்.

இதனையடுத்து சென்னை உயர்நிதி மன்றம் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச்,வினோத், பட தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.