10 கோடி வசூலை நெருங்கும் அஜித்தின் வலிமை.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது இப்படம் வெளியான 25 நாட்களில் சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான 25 நாட்களில் சென்னையில் மட்டும் இப்படம் 9.74 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரம் இறுதிக்குள் வலிமை திரைப்படம் 10 கோடி வசூலை நெருங்கி விடும் என கூறப்படுகிறது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக படம் ஓடிகொண்டிருக்கும் நிலையில், வருகின்ற 25-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜி5 ஓடிடி தளத்தில் வலிமை படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.