அமெரிக்க துணை ஜனாதிபதி பெயர் பட்டியல்.. இந்திய வம்சாவளியில் இருவர்…?

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது துணை ஜனாதிபதி யார் என்பதற்கான சில பெயர்களை டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ள பெயர் பட்டியலில்  இந்திய-அமெரிக்க பயோடெக் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமியும் உள்ளார் என முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  ஃபாக்ஸ் நியூஸ்(Fox News )டவுன் ஹால் நிகழ்ச்சியின் போது, ​​டொனால்ட் டிரம்ப் துணை ஜனாதிபதி பதவிக்கு எந்தெந்த பெயர்களை தேர்வு செய்துள்ளார் என்று கேட்கப்பட்டபோது, ​​அவர் சிலர் பெயர்களை கூறினார். அதில் தென் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், ஹவாய் முன்னாள் காங்கிரஸ் பெண் துளசி கபார்ட்  புளோரிடா பிரதிநிதி பைரன் டொனால்ட்ஸ், தெற்கு டகோட்டா கவர்னர் கிறிஸ்டி நோம் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரின் பெயர்களை டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இருப்பினும், அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடும் மற்றொரு இந்திய தலைவரான நிக்கி ஹேலியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஃபாக்ஸ் நியூஸ் டவுன் ஹால் நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரா ” இவர்களில் யார் யார் ஷார்ட்லிஸ்ட்டில் இருக்கிறார்கள..? என கேட்டார். அதற்கு அவர்கள் அனைவரும் நல்லவர்கள், அவர்கள் அனைவரும் வலிமையானவர்கள் டிரம்ப் தெரிவித்தார். அதே சமயம், டிரம்ப்பின் முதல் தேர்வாக விவேக் ராமசாமி வருவார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் அவர் தேர்தெடுத்துள்ள மற்ற தலைவர்கள் டிரம்புடன் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடம் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால் ராமசாமி எப்போதும் டிரம்பை புகழ்ந்து வருகிறார். அதேசமயம் டொனால்ட் டிரம்ப்பைப் போலவே விவேக் ராமசாமியும் அமெரிக்க அரசியலில் ஒரு பெரிய பெயராக உருவெடுத்துள்ளார். வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்கா அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த முறையும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே போட்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

author avatar
murugan

Leave a Comment