சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 

சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  வந்தடைந்தார்.ட்ரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.விமான நிலையத்தில் டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.பிரதமர் மோடி  உலகத் தலைவர்கள் வருகையின்போது சபர்மதி ஆசிரமத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க அவர்களை அழைத்துச்செல்வது வழக்கம் ஆகும் . அந்த வகையில் இந்தியா வந்த  அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்.

Join our channel google news Youtube