ராகுல் காந்திக்கு யாரோ OBC பற்றி எழுதி கொடுக்கின்றனர்.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

ராகுல் காந்திக்கு யாரோ OBC பற்றி எழுதி கொடுக்கின்றனர்.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Congress MP Rahul Gandhi - Union Minister Amit shah

இம்மாதம் நடைபெறும் 5 மாநில தேர்தல் என்பது அடுத்து வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும், 5 மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் மாநில அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாலும் பாஜக , காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு பற்றிய பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறார். இதுகுறித்து இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமரித்தார்.

காங்கிரஸ் அந்த சமூகத்தினரை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது.! பிரதமர் மோடி குற்றசாட்டு.!

இன்று மத்திய பிரதேசத்தில், ரேவா தொகுதி பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ ஓபிசி பற்றி பேசினால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு யாரோ எழுதி கொடுத்துவிட்டனர். அதனை வைத்து அவர் பேசி வருகிறார் .

காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) எதிரான கட்சி. கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகத்தினரை கண்டறியும் மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் கட்சியினர் அமல்படுத்தவில்லை. (ஜனதா கட்சி அமல்படுத்தியது) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளித்வர் பிரதமர் மோடி என்று இன்றைய பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube