சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பு.!

குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மத்திய உள்துறை அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறிப்பாக மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாண்டி பஜார் சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, தனி விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அமித்ஷா, ராமநாதபுரம், திருநெல்வேலியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்