தமிழகத்தில் 74வது குடியரசு தினவிழாவில் இன்றைய மாற்றங்கள்…

தமிழக குடியரசு தின விழாவில் இரண்டு சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. 

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு டெல்லி செங்கோட்டை முதல் தமிழ்நாடு மெரினா கடற்கரை வரை மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளது. தமிழக அரசு சார்பாக நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடி ஏற்றி வைக்க உள்ளார்.

மெரினா கடற்கரை சாலை : இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஆண்டுதோறும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தான் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.  ஆனால், இந்த ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு தமிழக அரசு சார்பில்  குடியரசு தின விழா நடைபெற உள்ளது.

அணிவகுப்பில் மாணவர்கள் : இந்த குடியரசு தின அணிவகுப்பில் தேசிய மாணவர் படை மத்திய தொழில்பாதுகாப்பு படை, காவல்துறை தீயணைப்புத்துறை என அனைவருக்கும் ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கலை நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்காமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் மாணவர்களின் பங்களிப்பு இந்த ஆண்டு இருந்துள்ளது.

Leave a Comment