ஆந்திர மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து இருவர் பலி..!

ஆந்திர மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து இருவர் பலி..!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சிலிண்டர் வெடித்ததில்  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் நர்சபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் ஆறு வயது சிறுவனான ரோஹித் குமாரும் அவனது தந்தை பொம்மிடி நாகராஜும் (35) இருந்துள்ளனர். அதனால் சிலிண்டர் வெடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அப்பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும், வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube