கொரோனா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது.!

கொரோனா  வைரஸிடம் இருந்து தப்பிக்க சமூகவலைத் தளங்களில் தவறான வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.மேலும் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி பரப்பிய சாமிநாதன், அப்துல் ரகுமான் அகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் சமூகவலை தளத்தில் மது குடித்தால் கொரோனா வராது என்ற வதந்தி செய்தியை நம்பி ஈரானில் ஏராளமான மக்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் குடித்து 300 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.