வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள்.? விதிமீறினார்களா நயன் – விக்கி.? சிக்கலில் நட்சத்திர தம்பதி.!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து இந்த  தம்பதிக்கு அக்டோபர் 9-ஆம் தேதி (நேற்று) இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாக தங்களுடைய சமூகவலைதளபக்கங்களில் அறிவித்திருந்தார்கள். இதற்கு பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

Nayan-Vignesh

ஏனென்றால், திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இதனையடுத்து சில, இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன்- இந்த வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? உள்ளாடைகளுடன் நடிகை சமீரா ரெட்டி.! வைரல் புகைப்படங்கள் இதோ…

nayan vignesh baby

மேலும், இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்வது தடைச் செய்யப்பட்டுள்ளது. அது தவிர, கணவன், மனைவி என இருவரில் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் குறை இருந்தால் மட்டுமே திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகு வாடகைத் தாய் மூலமாக பெற்றுக் கொள்ளும் உரிமை உள்ளது.

Nayan-Vignesh

தம்பதிக்கும் வாடகைத் தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் இருக்கவேண்டுமாம், ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். இந்நிலையில், இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய் மூலமாக அம்மாவான நயன்தாரா, நிறைய சட்டப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment