தீபாளிக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

தீபாளிக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

poli

நாம் நமது வீடுகளில் பண்டிகை நாட்களில் விதவிதமாக பலகாரம் செய்வது வழக்கம். அதிலும் தீபாவளி என்றாலே நமக்கு பலகாரம், பட்டாசு இருந்தால் தான் சிறப்பானதாக அமையும். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும்  கூடிய போலி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • மைதா மாவு – 2 கப்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • பாசி பருப்பு – 1 கப்
  • வெல்லம் – தேவையான அளவு
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு இரண்டு கப் எடுத்து அதனுள் சிறிதளவு மஞ்சள் தூள், ஆப்ப சோடா, சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோதுமை மாவில் குலோப் ஜாமுனா? இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க!

பிசைத்த பின்பு அதன் மேலாக நெய் தடவி இரண்டு மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். இதற்கு இடையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் வெல்லத்தை போட்டு நன்கு கரைத்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு ஒரு குக்கரில் ஒரு கப் பாசிப்பருப்பை கழுவி, அதனுடன் தண்ணீர் ஊற்றி, அதனை மூன்றுவிசில்  வரும் வரை நன்கு அதை அவிய விட்டு இறக்க வேண்டும். பின்பு தயார் செய்து வைத்துள்ள வெள்ளை பாகுடன், பாசிப்பருப்பு கலவையை போட்டு நன்கு பிசைந்து சிறிதளவு உப்பு சேர்த்து  தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் மாவை சிறிய உருண்டையாக எடுத்து, அதனுள் குழி போட்டு பருப்பு மற்றும் வெல்ல கலவையை வைத்து, மீண்டும் உருண்டையாக செய்து அதனை சிறிய ரொட்டி போல தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தோசை கல் சூடேறியவுடன், செய்து வைத்துள்ள போலியை இரண்டு பக்கங்களும் போட்டு வேகா விட்டு எடுத்து பரிமாறலாம். இப்பொது சுவையான போலி தயார்.

Join our channel google news Youtube