சிவகார்த்திகேயனை நம்புனா வேலைக்கு ஆகாது! அலேக்காக நகர்ந்த டான் இயக்குனர்!

சிவகார்த்திகேயனை நம்புனா வேலைக்கு ஆகாது! அலேக்காக நகர்ந்த டான் இயக்குனர்!

sk and Cibi Chakaravarthi

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான டான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. 100 கோடி வசூல் செய்து இந்த திரைப்படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இது தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு முதல் திரைப்படம்.

முதல் திரைப்படத்திலே ஒரு இயக்குனர் 100 கோடி வசூல் செய்யும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை எனவே , டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்த நிலையில், டான் வெற்றியை தொடர்ந்து  அடுத்ததாக மீண்டும் சிபி சக்கரவர்த்தி மற்றும் இருவரும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், சிபி சக்கரவர்த்தி  மற்றும் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளார்களாம். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாம். ஏனென்றால், படத்தின் கதையை சிபி சக்கரவர்த்தி  சிவகார்த்திகேயனிடம் கூற பிடித்திருக்கிறது ஆனால் ஒரு ஒரு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் நான் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

இதனால் சிவகார்த்திகேயன் நம்பினால் வேளைக்கு ஆகாது அந்த ஒரு ஆண்டுகளுக்கு வேறு யாவது படத்தை இயக்கி முடித்துவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். அதன் படி, அவர் அடுத்ததாக நடிகர் நானியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறாராம். இந்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தும் விட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லை நானி மற்றும் சிபி சக்கரவர்த்தி இணையும் இந்த திரைப்படத்தில் நானிக்கு வில்லனாக பிரபல நடிகரான விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் யாருடைய இயக்கத்தில் தனது 22-வது திரைப்படத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் உள்ளது. ஒரு வேலை சிவகார்த்திகேயன் தன்னுடைய 22-வது படத்தில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube