ட்ரம்ப், மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம்.!

  • டிரம்ப், பிரதமர் மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையை நினைவுகூரும் வகையில், இந்த ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக, நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் அரசு பயணமாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்பின் பிரத்தேயாக காரில் புறப்பட்டார். இதையடுத்து நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சி நடக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்துக்கு ட்ரம்ப் செல்ல இருக்கிறார். மேலும் ட்ரம்ப் செல்லும் வழியெங்கும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏரளமான மக்கள் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்